
அந்த
நீல விளக்கின் ஒளி
அறை முழுதும் வியாபித்திருந்தது!
அரை இருட்டில் உறக்கம் வரவில்லை!
வெள்ளத்தில் அடித்து வரும்
குப்பை போல் ஏதேதோ
எண்ணங்கள்!
மனதின் அறைகளில் ரகசியமாய்
கேட்ட வண்ணமிருந்தது
அவள் குரலின் ரீங்காரம்!
என் கைபேசி மணியின்
சிணுங்கலில் அவள் இணைவாளென
காத்திருந்தேன்!
இணையவில்லை!
நான் வரைந்த ஓவியத்திற்கு
நானே உயிர் கொடுக்க
ஆரம்பித்தேன்!
ஓவியம்
உயிர் கொள்ளும் முன்
நீல ஒளியில்
என்னை அறியாமல்
உறங்கிப் போனேன்!
கனவில்
என் கைபெபேசியின் மணி
சிணுங்கிக் கொண்டே இருந்தது!
11-05-2026
.
