மீ.விசுவநாதன்/ *படைப்பின் ரகசியம்”

வானம் காற்று தீயும்
மண்ணும் நீரும் தந்தான்!
தானும் அங்கே உள்ளே
சக்தி யாக நின்றான்!
கானம் பாடும் புட்கள்
காதல் செய்யும் ஜீவன்
மானங் கொண்டு நன்கு
வாழ வேண்டு மென்றான்!.

எல்லாம் தந்த தேவன்
ஏனோ ஆசைத் தீயை
மெல்ல நெஞ்சில் ஏற்றி
விட்டில் போலத் தீயின்
செல்லச் சூட்டில் மாய்த்தான்!
சிந்தை செய்து பார்த்து
பொல்லா வேட்கை விட்டால்
போற்றும் அன்பே என்றான்!.
(17.05.2026)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன