
நிழல்மீது நிழல் மோதவே
வலிக்கும் எனக்கு
ஆனால் சிக்னலில்
சின்னஞ் சிறுசு முதல்
முதியோர் வரை
கை நீட்டிப் பிச்சை எடுக்கையில்
அடைத்த கண்ணாடி காருக்குள்
குளிரூட்டப்பட்ட இருக்கையில்
அமர்ந்தபடி
கடந்து போவதில் சிக்கலில்லை
கண்ணாடி வழியே பார்க்கும்போது
அவர்கள் வெறும் காட்சிப் பொருட்களன்றி
வேறில்லை
சங்க கால கவிஞன் முதல்
சமசால கவிஞன் வரை
பசியைத் தான் பக்கம் பக்கமாக
எழுதிக் குவித்திருக்கிறான்
லச்சையின்றி
அள்ளிக் சொண்டு போகும்
சமூகத்தில்
கை நீட்டுபவனுக்கு கிடைப்பதென்னவோ
ஒரு கவளம் தான்
நீ நேர்மையானவன்
நிம்மதியாக இருப்பது போலவும்
அவர்கள் மகிழ்ச்சியற்று
துன்பப்படுவது போலவும்
கொள்ளும் பாவனைதான்
விசித்திரமாயிருகிறது
உண்மையில் அவ்வளவு
பெரிய கரிய யானையைப் பாராமல்
அதன் துதிக்கையில் உச்சியில்
இருக்கும் சிறு சிறு செம்பழுப்பு
புள்ளிகளைத் தேடி கண்டு பிடிக்கும் மனிதர்கள்
அதிர்ச்சிகரமானவர்கள் தான்
