விஜயலக்ஷ்மி கண்ணன் /கடவுள் நிம்மதியாக இருக்கட்டும்

எனக்கும் தான்
பிடிக்கவில்லை
கடவுளாக இருக்க.

மனிதன் இன்னும் மனிதனாகவே இல்லையே!

சில நொடி மிருகமாக, அரக்கனாகவும்
இருக்கையில்
எங்கே மனித நேயம்?

கரையான் போல் அரித்து,
கஞ்சனா மாறி,
காலத்தைக் காட்டி லும் வேகமாக காடுகளை சிதைத்து
எங்கே போகிறான் மனிதன்.
மனிதன் கடவுள் ஆனால் கடவுளையும் லஞ்சாதிபதி ஆக்கிடுவார்!
வேண்டாம்!!
கடவுள் நிம்மதியாக இருக்கட்டும்!!!

16.05.2026