விஞ்ஞானி/சட்டென்று மாறுது வானிலை

வேலைக்குப் போகும் அப்பா
வீட்டுக்குள் வருகையில்
சட்டென்று மாறுது வானிலை.

தலைமை ஆசிரியர் தலையை
கண்டதும் வகுப்புகளில்
சட்டென்று மாறுது வானிலை.

மகப்பேறு மருத்துவமனையில்
புது வரவு குரலைக் கேட்டதும்
சட்டென்று மாறுது வானிலை.

சாப்பிடும்போது அம்மாவின்
சமையலை நினைவுக்கூர
சட்டென்று மாறுது வானிலை.

பாலை மனங்களில் மழையென
மழலைகள் நுழைகையில்
சட்டென்று மாறுது வானிலை.

One Comment on “விஞ்ஞானி/சட்டென்று மாறுது வானிலை”

Comments are closed.