இந்திய தத்துவ ஞானம்/

இந்திய தத்துவ ஞானம்

வேதங்கள் – 1

இந்தக் கட்டுரையிலே வேதங்களைப்பற்றிப் பொதுவான சில விஷயங்களைக் குறிப்பிடுவோம். அடுத்த கட்டுரையிலே வேதங்களிலே என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதையும், அவை இந்திய தத்துவ, சமய வளர்ச்சிக்கு எங்ஙனம் குறுப்பிட்டன என்பதையும், அவை இந்திய தத்துவ, நீதியியல் என்பதையும் குறிப்பிடுவோம்.

வேதங்கள் என்ற சொல்லின் கருத்து

வேதம் ‘வித்’ என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது. ‘வித்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு அறிவு என்பது கருத்து. எனவே, வேதங்கள் என்ற சொல்லுக்கு அறிவு நூல்கள் என்பது பொருளாகின்றது. வேதங்கள் அறிவு நூல்களாயின், அவை எதைப்பற்றிய அறிவை நமக்குத் தருகின்றன என்ற வினா எழுவது இயல்பு.

இரு வகை அறிவு

அறிவில் இரண்டு வகை உண்டு. மனிதன் தன் வாழ்க்கையை இனிதாக்குவதற்கு உலகியலான பொருள்களை எவ்வெவ்விதமாய்ப் பயன்படுத்தலாமென்பதை அறிவது ஒருவகை அறிவு. இந்த வாழ்க்கையும் இந்த உலகமும் எதற்காக என்பதை அறிவதே இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகை அறிவின் விரிவே தத்துவ ஞானம் எனப்படுவது. முதலாவது அறிவுக்கு உலகியலான பொருள்களும் உலகின் பகுதிகளும் விஷயமாக, இரண்டாவது வகை அறிவு, உலகம் முழுவதையும் தன் விஷயமாகக் கொள்கிறது. இந்த உலகம் எதிலிருந்து, எங்ஙனம், எதற்காக உற்பத்தியானது என்பதை ஆராய்கின்றது. ஆகவே, இந்த இரண்டாவது வகையே அடிப்படையானது. இந்த அடிப்படை அறிவை நமக்குத் தருவது என்ற காரணத்தால்தான்,

வேதங்களின் சிறப்பு

வேதங்கள் இந்த அடிப்படை அறிவைக் தருவதனால் தான் அவற்றிற்கு “அபௌருஷேய” என்ற பெயர் பொருந்துகிறது. “அபௌருஷேய” என்றால் மனிதரால் ஆக்கப்படாதது என்று பொருள். வேறு நூல்களிலிருந்து நாம் பெறக்கூடிய எதுவும் இல்லை என்பது கருத்தல்ல. இந்த அறிவிற்கு மனிதப் பிற்காலத்திலே ஏற்பட்ட வளர்ச்சியனைத்துக்கும் வித்துக்கள் அங்கு காணலாம் என்பதுதான் கருத்து.

இன்று மிகப்பெருந்த வளர்ச்சிகளை மேறாட்டுத் தத்துவ ஞானமும் கிரேக்க ஞானியர் பிளேட்டோ என்பவரும் கூறிய சில சூத்திரங்களை விளக்க எழுந்தவைகளே என ஓர் அறிஞர் கூறினார். அதைப் போலவே, சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய தத்துவ ஞானத் துறையிலே ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான விருத்தியனைத்தும் வேதங்களிலே காணப்படும் சில வாக்கியங்களுக்கு விளக்கமும், அந்த விளக்கத்திற்கு விளக்கமுமாக எழுதப்பட்டவையே எனக் கூறலாம். இந்திய தத்துவ ஞானத் துறையிலும் சமயத் துறையிலும் இன்று காணப்படும் கருத்துகள் சிற்சில விஷயங்களிலே தோன்றிய மாற்றங்களாகக் காணப்பட்டாலும் அவை யாவற்றுக்கும் பிறப்பிடம் வேதமே என்பது குறிப்பிடத்தக்கது. எசு கிறிஸ்து நாதரின் பதினான்குநூறும் மிக முக்கியமானதாகிய இயேசுவின் போதத்தின் சிறப்பைக் கூற வந்த ஆசிரியர், அதன்பின் பசு நெய்யின் சுவைக்கு ஒப்பிட்டு, அந்த நெய்க்கு எங்ஙனம் பசு பிறப்பிடமாயிதோ, அதைப் போலவே சிலரின் போதத்துக்கு மூலம் வேதமே எனக் கூறியுள்ளார்.

இந்திய தத்துவ ஞானமனைத்துக்கும், சமய அறிவு அனைத்துக்கும் மூலம் என்பது மட்டுமல்ல வேதங்களின் சிறப்பு. உலகம், ஆன்மா, இறைவன் ஆகியன பற்றி முதன் முதல் சிந்தித்த மனிதன் கருத்துகளைக் கொண்டிருந்தான் என்பதை அறிய வேண்டுமானாலும் வேதங்களைத்தான் நாட வேண்டும்.

வேத காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட காலத்திலோ ஆக்கப்பட்ட வேறு நூல் எதுவும் இன்று கிடையாது. எனவே, இந்திய மக்களை மட்டுமன்றி மனித குலம் முழுவதையுமே எடுத்துக் கொண்டாற்கூட, மனித வர்க்கத்தின் முதற்சிந்தனைகளைக் கூறும் முதனூல் என்ற சிறப்பும் வேதங்களுக்கே உரியது எனவும் கொள்ளலாம்.

இன்று உலகில் வழக்கிலுள்ள கலாசாரங்களுள் எங்ஙனம் இந்திய கலாசாரமே பழையதோ, அங்ஙனமே அக்கலாசாரத்தின் மூல இலக்கியமாகிய வேதங்களும் இன்று வழக்கிலுள்ள உலக இலக்கியங்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையனவாகும்.

இந்திய கலாசாரத்தோடு ஒத்த காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் தோன்றிய கலாசாரங்கள் யாவும் இடையீடின்றித் தொடர்ந்து நிலைத்து நிற்கவியலாது அழிந்து போக, இந்திய கலாசாரம் மட்டுமே பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நிலைத்து நிற்கின்றது. இக் கலாசாரத்திலுள்ள ஏதோ ஒரு தனிச்சிறப்பே இதற்குக் காரணமாயிருத்தல் வேண்டும்.

இதுபோலவே, வேத காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் ஆக்கப்பட்ட இலக்கியம் யாவும் அழிந்து போக, வேதங்கள் மட்டுமே அன்று போல் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளாக அவற்றை நிலைத்து நிற்கச் செய்த அவற்றின்கண்ணுள்ள அற்புதமான சிவசக்தியே அவற்றின் தனிச்சிறப்பாகும்.

வேதங்களின் காலம்

மேலே வேதங்களின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அவற்றுள் பழமையும் ஒன்றெனக் கூறினோம். வேதம்…

மொழி எதுவாயிருந்தபோதும் இந்திய மக்களனைவரும் சமய, தத்துவக் கருத்துகளைக் கூறுவதற்கு வடமொழி கொண்டிருந்ததையே தமக்குப் பொது மொழியாகக் கொண்டிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது. இவைகளை நோக்கும் போது, வடமொழியில் எழுதப்பட்ட போதிலும் வேதத்திலுள்ள தத்துவக் கருத்துகளே தமிழ் மக்களுடைய கருத்துகளுக்கும் மூலம் என்பதில் பொருந்தாமை எதையும் காணவில்லையென்றே கூறலாம்.

மிகப்பழையது எனின் அது எவ்வளவு பழையது, அது ஆக்கப்பட்ட காலம் எது என்ற வினாக்கள் எழுவது இயல்பு. கௌதம புத்தர் தமது காலத்தில் வழக்கிலிருந்த மதத்தை எதிர்த்தே தமது மதத்தைத் தாபித்தார். ஆகையால், வேதங்கள் கௌதமருக்கு முற்பட்டன என்பது நிச்சயம்.

கௌதமர் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொண்ட விஷயம். ஆகவே, வேதங்கள் குறைந்த பட்சம் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டன என்பதில் ஆட்சேபணை இருக்க இடமில்லை.

ஆயினும், கிறிஸ்துவுக்கு முன் எவ்வளவு காலம் தொடங்கி அவை உள்ளன என்பது நிச்சயமாகவில்லை. சிலர் கிறிஸ்துவுக்கு 6000 ஆண்டுகள் முன்பே அவை ஆக்கப்பட்டுவிட்டன என்கின்றனர். இக் கருத்தை ஒப்புக்கொள்வதாயின் வேதங்கள் இற்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன்பே ஆக்கப்பட்டுவிட்டன என்பது முடிவாகும்.

வேதங்களின் காலம் கிறிஸ்துவுக்கு முன் 6000 ஆண்டு என்பதை யாரும் ஆட்சேபித்தாலும், கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே – அதாவது, இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பே – அவை ஆக்கப்பட்டுவிட்டன என்பதை யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள் என்பது ராதாகிருஷ்ணன் கருத்து.

வேதங்களை ஆக்கியோன்

இனி, இந்த வேதங்களை ஆக்கியவர் யார் என்பது பற்றி இரண்டொரு குறிப்புகளை இங்கு குறிப்பீடுவோம்.

வேதங்கள் மனிதர் எவராலும் ஆக்கப்பட்டன அல்ல என்ற கருத்தில் வேதங்களுக்கு “அபௌருஷேயம்” என்றொரு பெயர் உண்டு என மேலே குறிப்பிட்டோம். புருஷன் என்பதற்கு மனிதன் என்பதே கருத்து. வேதங்கள் எவராலும் எழுதப்படாதவை என்ற கருத்துப்பட அவற்றை “எழுதாமறை” எனக் குறிப்பிடும் வழக்கமும் உண்டு.

இந்த இடத்திலே “மறை” என்ற சொல்லைப்பற்றி ஒரு…

குறிப்புக் கூற வேண்டும். வேதங்கள் சில சமயங்களில் ஓதப்படல் ஆகாது; அவர்களிடமிருந்து அவை பகிரத்து எவக்கப்படல் வேண்டும்; அதனால்தான் அவற்றுக்கு “மறை” என்ற பெயர் ஏற்படலாயிற்று என சிலர் தவறாகக் கருதுகின்றனர்.

“மறை” என்பதற்குக் கருத்து, மறைத்து வைக்கப்பட வேண்டிய நூல் என்பதல்ல; மறைத்து நிற்கும் பரம்பொருளை விளக்கும் நூல் என்பதுதான் அதன் கருத்து என்பது கவனிக்கத்தக்கது.

வேதங்களுக்குச் “சுருதி” என்றொரு பெயரும் உண்டு. “சுருதி” என்றால் காதால் கேட்பது என்பது கருத்து. ஆதியில் வேதங்கள் எழுதிவைக்கப்படாமலிருந்த காலத்தில், குரு-சீட முறையில் ஒருவர் சொல்ல, மற்றவர் அதனைக் காதால் கேட்டு மனத்தில் வைத்துப் பின் தமக்குச் சீடராய் வருபவருக்குச் சொல்ல, அவரும் அதனைக் கேட்டு மனனம் பண்ண, இவ்வாறு கேள்வியினால் பல நூறாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டமையாலேயே அப்பெயர் ஏற்படலாயிற்று.

இவ்வாறு பலவற்றையும் ஆராயுமிடத்து, வேதங்கள் குறிப்பிட்ட ஒருவரால், குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஆக்கப்பட்டவை அல்ல என்ற முடிவே உறுதியாகின்றது.

வேதங்களும் தமிழ் மக்களும்

ஆரியருக்கு உரியவை எனக் கருதப்படுபவையும் தமிழ் மொழியில் இல்லாது வடமொழியில் எழுதப்பட்டனவுமாகிய இந்த வேதங்கள் தமிழ் மக்களாகிய எம்முடைய தத்துவக் கொள்கைகளுக்கும் சமயக் கொள்கைகளுக்கும் எங்ஙனம் மூல இலக்கியமாகும் என்பதுபற்றி இரண்டொரு வார்த்தைகள் கூறுவது இங்கு அவசியமாகும்.

பேசும் மொழியால், வாழும் மாகாணத்தால் வேறுபட்டாலும், அடிப்படையிலே பாரத தேசம் முழுவதற்கும் பொதுவான கலாசாரம் ஒன்றுண்டு என்பதைப் பெரும்பாலும் எல்லோரும் ஒப்புக்கொள்வர். தாம் தாம் பேசும்…

வேத நெறியும் தமிழ் நெறியும்

இது இவ்வாறாகவும், இன்று சிலர் “வடமொழியிலுள்ள வேதங்கள் தமிழ் மக்களுக்கு உடன்பாடாகா. வேத நெறி வேறு; பழந்தமிழ் நெறி வேறு; அவற்றுக்கு இடையே கருத்தொற்றுமை கிடையாது” என்றும், தேவாரங்கள் குறிக்கும் வேதங்கள் இந்த வடமொழி வேதங்கள் அல்ல என்றும், இன்னும் இவை போன்ற பலவும் கூறுகின்றனர்.

ஆனால், வேதங்களுள்ளே மிக முதன்மையானதாகிய ருக் வேதத்திலே இந்திரனும் வருணனுமே சிறப்பாகப் பேசப்படுகின்றனர். தமிழ் மொழியிலே இன்றுள்ள நூல்களுள் மிகப் பழையதாகிய தொல்காப்பியத்திலே “வேந்தன் (இந்திரன்) மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும்” என இந்திரனும் வருணனும் குறிப்பிடப்படுகின்றனர். சிலப்பதிகாரத்திலே இந்திரனுக்கு விழாவெடுப்பதைக் கூறும் பகுதியாகிய “இந்திர விழாவூரெடுத்த காதை”யைக் காண்கின்றோம்.

தமிழருள் பெரும்பாலோர் சைவர்கள். “சைவம்” சிவன் என்னும் பெயரடியாக வந்தது. முதன்முதல் ருக் வேதத்திலே “சிவன்” என்ற சொல்லும், அவன் “நீலகண்டன்” என்ற வருணனையும் காணப்படுகின்றன. நீலகண்டன், அதாவது, நீலநிறமான கழுத்தையுடையவன் என்ற அதே கருத்தையே சங்க இலக்கியங்களுள் மிக முதன்மையானதும்…

மிகப் பழமையானதுமான புறநானூற்றிலும் “நீலமணி மிடற்று ஒருவன்” என்ற சொற்றொடரிலே காண்கின்றோம்.

இவை ஒருபுறமாக, வேத வாக்கியங்களையும் அப்பர், சுந்தரர், சம்பந்தர் இயற்றிய தேவாரங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்த பேரறிஞராகிய காலஞ்சென்ற காசிவாசி செந்திநாதையர் அவர்கள் தக்க ஆதாரங்கள் காட்டி, “வேதசாரமே தேவாரம்” என அறுதியிட்டு, “தேவாரம் வேதசாரம்” என்ற பெயரில் அரிய நூலொன்றை எழுதியுள்ளார்.

அந்நூலிலே தேவாரத்திலுள்ள அதே கருத்துகள் வேதங்களிலும் உள்ளன என்பதை நிரூபிப்பதற்காக, வேத சுலோகங்களையும் அவற்றின் தமிழ் விளக்கங்களையும் எழுதி, அவையொவ்வொன்றுக்கும் பக்கத்திலே அதே கருத்தையுடைய தேவாரத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

மூவர் அருளிய தேவாரங்களை வேதசாரமாகக் கொள்வது போல, மணிவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தை உபநிடதங்களின் சாரமாகக் கொள்ளும் மரபும் உண்டு. உபநிடத வாக்கியங்களிலுள்ள அதே கருத்துக்களையுடைய பாசுரங்கள் பலவற்றைத் திருவாசகத்திலே காணலாம்.

சிவஞான போதமாகிய நெய்யின் சுவைக்கு வேதமாகிய பசுவே பிறப்பிடம் என ஆசிரியர் ஒருவர் கூறியதையும் மேலே கண்டோம்.

இவையனைத்தையும் நோக்குமிடத்து, ஆரியர் இந்திய நாட்டினுள் புகுமுன்பே இந்திய நாட்டிலே நிலவிய கருத்துகளே வேதங்களில் இடம் பெற்றுப் பின் தமிழ்நூல்களிலும் இடம் பெற்றுள்ளன என ஒருவர் வாதாடலாமே யொழிய, வேத நெறி தமிழ் மக்களுக்கு உடன்பாடான நெறியல்ல என்றோ, அல்லது தேவாரங்களெங்கணும் “வேதம் வேதம்” என வரும் இடங்களிலெல்லாம் குறிப்பிடப்படுவது இந்த வடமொழி வேதமல்ல; அது வேறேதோ தமிழ் வேதம் என்றோ வாதாட இடமில்லை என்றுதான் தோன்றுகின்றது.

இவை யாவும் மேலும் ஆராயப்பட வேண்டியவை.

வேதங்களும் மேல்நாட்டவரும்

வேதங்களைப் பயில வேண்டுமென்னும் ஆர்வமுடையோர் தொகை இன்று குறைந்து வருகின்றது. மொழிபெயர்ப்பின் துணையில்லாமல் சுலோகங்களை நேரே விளங்கிக் கொள்ளக்கூடிய அளவு வடமொழிப் பயிற்சியுடையோர் தொகையும் சென்ற சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருகின்றது.

நமது நாட்டுக்குரிய இந்த அறிவு நூல்களைப் பற்றி நாம் இவ்வளவு உதாசீனமாக இருக்கும் இதே சமயத்தில், எங்கோ ஐரோப்பாவிலிருக்கும் அறிஞர்கள் அரும்பாடு பட்டு வடமொழியைப் பயின்று, வேதங்களை வாசித்து, அவற்றைப்பற்றித் தாம் அறிந்தவை அனைத்தையும் தத்தம் மொழியிலே பெரும் பெரும் நூல்களாய் எழுதி வைத்துள்ளனர்.

இன்று நம் நாட்டிலே யுள்ள வேதப்பொருளை நாம் அறிய வேண்டுமாயின் பிற நாட்டினர் பிற மொழிகளிலே எழுதிவைத்த நூல்களையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் தமது “இந்திய தத்துவ ஞானம்” என்னும் நூலிலே வேதங்களைப்பற்றிய அத்தியாயத்திலே துணை நூல்களாகக் குறிப்பிட்டிருப்பவை யாவும் முழுக்க முழுக்கப் பிற நாட்டவருடைய நூல்களேயாகும்.

இதனை நோக்கும்போது, நம் நாட்டு நூல்களைக்கூட நாம் பிற நாட்டவரின் துணையின்றி அறிய முடியாதவர்களாக இருக்கின்றோமே என்ற எண்ணமே மேலோங்குகின்றது.

சுருக்கம்

இக்கட்டுரையிலே வேதம் என்ற சொல்லின் கருத்தையும், அப்பெயர் வேதத்துக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதையும், வேதங்களின் சிறப்புகள் சிலவற்றையும், வேதங்களின் காலத்தையும், அவற்றை ஆக்கியோர் யார் என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது என்பதையும், வேதங்களுக்கும் தமிழ்மக்களுக்குமுள்ள தொடர்பையும், வேதங்களை ஆராய்வதில் அண்மைக் காலத்தில் மேல்நாட்டவர் கொண்டுள்ள ஆர்வத்தையும் குறிப்பிட்டோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன