சுதா காலை எட்டு மணியிலிருந்து அந்த சிவப்புச் சட்டையைத் தேடிக் கொண்டிருக்கிறாள். இன்னும் அது கிடைக்காமல் மன அழுத்தத்துடன் அவள் காணப்பட்டாள்.
பீரோவில் இருந்த துணி யெல்லாம் கீழே இழுத்துப் போட்டு பார்த்தாள். வாஷிங் மெஷினில் இருக்கா என்று பார்த்தாள். அவள் தேடும் சிவப்பு சட்டை மட்டும் காணவில்லை.
ஒருவேளை நேத்து வேண்டாத துணியெல்லாம் நான் வெலைக்கு போட்டேன் அதில் அந்த சட்டை போயிருக்குமோ' என பலவிதமாக எண்ணினாள்.
நாடக வேஷம் போடும் தன்னோட கணவன் அந்த சிவப்புச் சட்டையைக் கேட்டால் என்ன பதில் சொல்வது ? அவர் அந்த சிவப்புச் சட்டை அணிந்து நாடகத்தில் நடித்த போதுதான் அவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. அதனால் அந்த சட்டையை பொன்போல் பாதுகாத்து வைத்திருந்தார்.
அவள் சிந்தனையைக் கலைப்பதைப்போல் " அக்கா அக்கா " என்ற குரல் கேட்டு வீட்டுக்கு வெளியே சுதா வந்து பார்த்தாள்.
அவன் தம்பி தில்லையம்பலம் அனுமான் வேஷத்தில் அந்த சிவப்புச் சட்டையை கொடிபோல் அசைத்துக் கொண்டு துள்ளலுடன் நின்று கொண்டிருந்தான்.