அழகியசிங்கர்/ஒரு நாடக நடிகை

அவள் ஒரு நாடக நடிகை. பல பெண் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள்.
அப்படி நடிப்பதால் அவளுக்கு அவள் யார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. கண்ணகி பாத்திரமேற்று நடிக்கும்போது அவள் ஆவேசமாக மாறி விடுகிறாள்.

திரௌபதி பாத்திரத்தில் நடிக்கும்போது அவள் எல்லா ஆண்களையும் ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கிறாள்.
அவளுக்குத் திருமணம் நடக்கிறது.

அவள் கணவன் இனி நாடகத்தில் நடிக்க வேண்டாமென்று சொல்லி விடுகிறான்.
அதை ஏற்றுக் கொள்வதில் அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் இப்போதுதான் அவளை அவளுக்குப் புரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன