சுஸ்ரீ/நூலகமும் போலி முகமும்

ரகோத்தமன் லைப்ரரியன் புதுசா வந்திருந்த புஸ்தகங்களுக்கு ஸ்டாம்ப் குத்தி ஏதோ எழுதி வேலை பாத்திட்டிருக்கறப்ப அவ வந்தா.எங்கயோ பாத்த முகம்போல இருந்தது.ஆனா கூண்டுக்குள்ள உக்காந்த கிளி மாதிரி இப்படியொரு முகம் வேணும்னே தன் அழகை மறைக்க வேஷம் போட்டது போல இருந்தா.
வாரம் ஒரு நாள்தான் வரா அவன் எதிரில் உள்ள நாற்காலி வரிசைல உக்காரறா.அவளும் இவனை அடிக்கடி பார்ப்பது தெரிஞ்சது.முகம் மட்டும் இப்படி குழந்தை கிறுக்கின பேப்பர் மாதிரி இல்லாட்டா பேரழகிதான். ஒரு நாள் அருகில் வந்து சுஸ்ரீ எழுதின “பன் பட்டர் ஜாம்” வந்திருக்கானு கேட்டா.
”இல்லை மேடம் பிரபல எழுத்தாளர்களோட புக்ஸ்தான் இப்ப சேத்திருக்கோம்”
“ஏன் ரகு என்னை உனக்கு ஞாபகம் இல்லையா, பாரதி வித்யாலயா ஆழ்வார்பேட்டை.”
“நீங்க…நீ. வித்யா ராமன் 7B தானே, பாத்த மாதிரி இருக்கேனு நினைச்சேன், ஆனா கேக்க கஷ்டமா இருக்கு முகமெல்லாம் ஏன் இப்படி”
ஒரு மர்மப் புன்னகை பூத்தாள் வித்யா,”நீ டி.வி.சீரியல் பாப்பயோ”னு
சம்பந்தம் இல்லாமல் கேட்டா.
“கிரிக்கெட், நியூஸ் மட்டும்தான் பாப்பேன் ஏன்?”
பொது மக்கள் தொந்தரவு வேண்டாம்னு போலி முகத்தோட வெளில உலவர பிரபல டி.வி. நடிகை சித்திராதேவி தன் உண்மை முகத்தைத் தன்னைக் கவர்ந்த ரகோத்தமனுக்கு எப்ப காட்டுவாளோ தெரியலை!

One Comment on “சுஸ்ரீ/நூலகமும் போலி முகமும்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன