மாலா மாதவன்/முகம் தொலைத்தவர்கள்

“அம்மா! உங்க அம்மா, பாட்டியைப் பத்திச் சொன்னீங்க. அவங்க அம்மா, அந்தம்மாவோட அம்மா அவங்கள்ளாம்?”
நிலா கேட்டபோது எனக்குப் பதில் சொல்லத் தெரிய வில்லை.
“எல்லோரும் வீட்டைப் பார்த்துக்கிட்டவங்க தான் நிலா என்னைப் போல.”
“அதென்னம்மா வீட்டைப் பார்த்துக்கிட்டவங்க? அவங்களுக்குன்னு ஒரு அடையாளம், தனித்துவம் இல்லையா?”
“இருந்திருக்கும். அது வெளியே தெரிஞ்சுருக்காது!”
“அப்ப அவங்க முகம் தொலைத்தவர்கள் தானே!”
“நிலா!”
“ஆமா. எல்லோர் நினைவிலும் அவங்க மறைந்து போனா?”
“நிலா..!”
“நாளைப் பின்னால் நாம் நிலைச்சு நிக்கணும்ன்னா நமக்கு ஒரு அடையாளம் வேணும்மா. முகம் தொலைத்தவர்கள் பட்டியலில் நாம் சேர வேண்டாம்.”
நிலாவின் பேச்சில் என் முகம் வண்ண மயமானது. ஓவியர் ஆனேன்.

2 Comments on “மாலா மாதவன்/முகம் தொலைத்தவர்கள்”

  1. அடையாளம் வேணும்தான். ஆனா அது சுலபமா கிடைச்சிடாது. உழைக்கணும். அப்பா, தாத்தா, அவங்க அப்பாவுக்கும் இதே நிலைமைதான். எனக்கு சுயமா முகம் வேணும்னா நான் அதுக்காகக் கஷ்டப் பட்டு உழைக்கணும். அப்போதான் கிடைக்கும். நல்ல எழுத்து நடை மா. வாழ்த்துகள்.

Comments are closed.