ஷைலஜா /சுமைகள்

“நாளைக்கு திருவிழா. காத்தான்சாமிக்கு முதல் அறுவடை படையல்.”*
ஊர்த் தலைமையின் உத்தரவு.
விடியற்காலை 5 மணி.
அஞ்சலைதன் தலையில் நெல் கூடையை ஏற்றினாள். கூடவே கையில் குத்து விளக்கு.
” நானும் வரேன்” என்று 8 வயது மகன் குமார் பின்னால் ஓடி வந்தான். வெள்ளை சட்டை, தலையில் குல்லா.
ஒருத்தி தலையில் காய்கறி கூடை.
ஒருத்தி கையில் பழக்கூடை.
இன்னொருத்தி தோளில் கரும்பு கட்டு என் பெண்கள் சேர்ந்தனர்
கூட்டமாகக் கிளம்பினார்கள்.
பின்னால் வேலுசாமியும் முனியன் தாத்தாவும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
வழியெல்லாம் சூரியகாந்தி பூப்பூத்து கிடந்தது.
கோயிலுக்கு வருவதற்குள் சுமையைத் தூக்க முடியாமல் தன் தாய் திண்டாடுவதை பார்த்த
குமார் கேட்டான்: “அம்மா, ஏன் எல்லாரும் தலையிலயே சுமக்குறீங்க?”
அஞ்சலை சிரித்தாள். *”தலையில சுமக்கிறது சுமை இல்லடா கண்ணு. நம்ம உழைப்பு.
மழை பெய்ய வச்சு நம்ம உழைப்புக்கு பலன் கொடுத்த சாமிக்கு நாம செய்ற நன்றி கடன்.
தலையிலநாம சுமந்தா கடவுள் மனசுலசுமந்து நமக்கு நல்லது செய்வாரு”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன