
நாயும் கல்லும்
நான்முகன் படைப்பு
கல்லால் அடிக்கப்
பயிற்சிகள் வேண்டாம்
இயல்பாய் வருவது
தவிப்பினில் இன்பம்
வாலை ஆட்டும்
விசுவாசம் காட்டும்
தின்ற சோற்றுக்கு
உயிரைக் கொடுத்துக்
காவல் காக்கும்
எட்டி உதைத்து
ஏவல் செய்தால்
பெட்டிப் பாம்பாய்
சேவகம் செய்யும்
எலும்பும் தோலுமாய்
எங்கோவொரு ஜீவன்
எதிர்ப்பையும் காட்டும்
காட்டினால் போச்சு
கடலெனத் திரண்டு
கற்றோர் மற்றோர்
காரணம் என்றுக்
கதைபல உரைப்பார்
படிக்க விடாமல்
குலைத்துக் கலைத்தது
வீதியில் விடாமல்
விழுந்து பிடுங்குது
தொட்டுப் பார்க்கக்
கூடாமல் கடிப்பது
இன்றைய தேவை இவைகளை ஒழிப்பது
அந்நிய ஜீவன்
அனுதினம் சலுகை
பெறுவது சிறப்பது
இயல்பே என்று
நாயை மட்டும்
தெருவினில் விட்டார்
தெருநாய் என்று
கல்லால் அடித்தார்
வெறிநாய் என்று
அன்றே அரசு கொல்ல
படைத்த தெய்வமோ
சேர்ந்தே நின்று
உதை வாங்கித்
தானும் செத்தது

👌