மாலா மாதவன்/தொப்பிக் கடன்

பல மாதங்களாக உடல் நிலை சரியில்லாது படுத்திருப்பவளிடம் தொடர்ந்தாற்போல் அதே முனகல்.
“தொப்பிக் கடனிருக்கு. சிவனுக்குச் செய்யணும்.”
கோவில் கோவிலாய் போய்த் தொப்பிபோல் மாலைகள் போட்டனர் தத்துப் பிள்ளைகள்.
தெளிவில்லை.
“ஏம்மா. சிவன்ங்கறது கடவுள் சிவன் இல்லையோ? ஒரு வேளை ப்ரெண்டோ?” பிள்ளைகள் பெத்தவளின் டைரியைத் தேடினர். அகப்பட்டது அப்புகைப்படம்.
“ப்ரெண்டாம்மா?” பிள்ளைகள் கேட்க…
“ஆமா.. அனாதையான என்னை வாக்குக் கொடுத்த படி படிக்க வைத்துப் பட்டம் வாங்க வைத்தான். அதன் பின் அவனைப் பார்க்கவே இல்லை.”
“சிவன் மாமாவை நாங்க தேடிக் கடனை அடைக்கிறோம்மா!”
ஆறுதலில் அவள் கண்கள் மூடிக் கொண்டன.