ஸ்ரீராம்/நண்பனே… எனது உயிர் நண்பனே

சுவரில் மாட்டி இருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் 40 வருடங்களுக்கு முந்தைய பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் ராஜேந்திரன்.


“இந்தா இந்தக் குடையை கொண்டு போய் உன் ஃபிரண்டு கிட்ட குடு. இதோட போகட்டும். எங்கேயோ போய்ப் பிழைச்சுக்கட்டும்” என்றார் ஆனந்த்.
“குடை எல்லாம் எதுக்கு வேஸ்ட் பண்ணிக்கிட்டு டாட்? அவனுக்குப் பிளாஸ்டிக் பேப்பர் போதும்” என்றபடி வெளியில் வந்தான் கௌதம்.
மழை பெய்து கொண்டிருந்ததால் மரத்தடியில் அடிபட்ட பார்வையுடன் நின்றுகொண்டிருந்தான் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் அந்த வீட்டு வேலை செய்தவரின் மகன். அவனும் வீட்டில் வந்து பழகியதால் கௌதம் படிக்கும் பள்ளியிலேயே சேர்த்து அவனையும் படிக்க வைத்து அவனையும் வீட்டிலேயே வைத்திருந்தார் ஆனந்த். ஆனால் ஒவ்வொரு தேர்விலும் ராஜேந்திரன் கௌதமை விட நல்ல மதிப்பெண்கள் பெற்றதில் காலப்போக்கில் அவன்மேல் அவருக்கு ஒரு வெறுப்பு உருவானது.
ஏதோ ஒரு சின்னப் பிரச்சனையைப் பெரிதாக்கி “உங்க வீட்டுக்கே போய் எங்கேயோ போய் ஏதோ ஒரு ஸ்கூலில் சேர்ந்து பொழச்சிக்கோ” என்று வெளியில் அனுப்பி விட்டார் ஆனந்த்.
“ராஜேந்திரா மழையில நனையாம இந்தப் பிளாஸ்டிக் பையைத் தலையில் மாட்டிக்கோ. உன் பைல உன் புத்தகங்களோட நான் இதுவரை சேர்த்து வைத்த பணமும் வச்சிருக்கேன். நீ நம்ம ஸ்கூலிலேயே தொடர்ந்து படி. எனக்கு வரும் பாக்கெட் மணி மற்ற எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். இவங்களுக்கு அதெல்லாம் புரியாது. தெரியவும் வேண்டாம். நம் பிரண்ட்ஷிப் இவங்களுக்கு புரியாது” என்று கூறி அவனை அனுப்பி வைத்தான் கௌதம்.


படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்த ஐந்து வருடங்களில் ஒரு விபத்தில் கௌதம் மறைந்து விட்ட செய்தி வந்ததும் பழைய நினைவை மறக்காமல் இருக்க இதுபோல ஒரு ஓவியம் எழுதிச் சுவரில் மாட்டி வைத்திருக்கிறார் தொழிலதிபர் ராஜேந்திரன்.

One Comment on “ஸ்ரீராம்/நண்பனே… எனது உயிர் நண்பனே”

  1. இக்கதையும் மனதை நெகிழ்ச்சி அடையச் செய்தது குறிப்பாக கௌதம் தன் தந்தைக்கு ஏற்றாற்போல பதில் சொல்லிவிட்டு நண்பன் ராஜேந்திரனுக்கு உதவும் பகுதி…ரொம்ப நல்லாருக்கு. முடிவும்

    கீதா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன