அர்ஜுனன்/படையல்

“குடும்பம், குட்டியோட எங்கேயோ கிளம்பிட்டீங்க போலிருக்கு?”
எதிர்ப்பட்ட நடேசனைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர்.
“ஆமாங்க..ய்யா.. குலதெய்வம் கோயிலுக்குப் போய்ப் படையல் போடப் போகிறோம்”
“படையல்னு சொல்றது நாம விதைச்சு, இறைவன் அருளால வளர்ந்து வர்ற விளைச்சல்ல ஒரு பங்கை இறைவனுக்கு படைக்கிறது தானே?”
“ஆமா..”
“அப்படியிருக்க நீங்க வளர்க்கிற ஆட்டை பலி கொடுத்து அதை சமைச்சு சாப்பிடறது சரியா?”
நடேசன் பதிலளிக்காமல் இருக்க, ஆசிரியர் தொடர்ந்தார்..
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.. அப்படின்னு வள்ளுவர் சொல்றார்.. அதாவது நீங்க புலால் மறுத்தா உங்களை எல்லா உயிரும் கைகூப்பி தொழுமாம்”
நடேசன் யோசிக்க ஆரம்பித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன