அர்ஜுனன்/ஓவியம்

கடைசி வரிசை மாணவன், பாடத்தைக் கவனிக்காமல் ஏதோ ஓவியத்தை வரைந்து கொண்டிருக்க, அருகில் வந்த ஆசிரியர் கேட்டார்…
“யார் இவர்?”
“என் அப்பா…”
ஓவியத்தில் கண்கள் சோர்வாக இருந்தன. முகத்தில் இருந்த மீசையும் கண்ணாடியும் அவரது தன்னம்பிக்கையைச் சொன்னது.
கழுத்தின் நீளம், சுமைகளைத் தனியே சுமந்த வாழ்க்கையை நினைவூட்டியது.
மொத்தத்தில் ஒரு நடுத்தர வயது தகப்பனை தத்ரூபமாக வரைந்தது போலத் தெரிந்தது.
அதைப் பார்த்த ஆசிரியரின் கண்களும் கலங்கின.
“உன் அப்பாவுக்கு இந்த ஓவியத்தைப் பரிசாகக் கொடு,” என்றார்.
அந்த ஓவியத்தைப் பெற்ற தந்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணீர் சிந்தினார்.
ஒரு குழந்தையின் ஓவியம், ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அன்பைச் சொல்லிவிட்டது.
*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன