
சைமன் அன்று தாய் ஆட்டை வெட்டுவதற்கு தீர்மானித்தான். சிங்காரியைக் கூப்பிட்டு தாய் ஆட்டை அழைத்து வரச் சொன்னான். சிங்காரி தாய் ஆட்டை ஓட்டி வந்தாள். அதை ஒரு இடத்தில் கட்டி வைத்தான் சைமன்.
குட்டி ஆடு மேரி தாய் ஆட்டையே சுற்றி சுற்றி வந்தது. மேரி சைமனுக்குச் செல்லம்.
மேரியைப் பார்த்துக் கொண்டிருந்த சைமனுக்கு என்ன தோன்றியதோ
தாய் ஆடை வெட்டாமல் விட்டுவிட்டான்.
