கௌரி சங்கர்/தியாகம்

என்னுடைய தாய்க்கு ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று ஆட்டுக்குட்டிகளில் நானும் ஒருத்தி. என்மேல் படர்ந்து இருந்த வெள்ளை வெளேர் என்ற மயிருக்காகவே, மங்கம்மா என்னை விலைக்கு வாங்கினாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நான் அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஹேமா மற்றும் முகுந்தனுடன் சேர்ந்து வளர்ந்தேன். குழைந்தைகள் என்றாலும் என்மீதுபாசம் அதிகம் உள்ளவர்கள். இரவில் என்னை அணைத்து வைத்துக்கொண்டு உறங்குவார்கள். எனக்குப் புல் தருவார்கள். கீரை இலைகளைச் சந்தையிலிருந்து வாங்கி வந்து தருவார்கள். நான் வளர்ந்தது கீரைகளை உண்டு என்று சொல்வதை விடப் பாசத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டேன் என்று சொன்னால் மிகையாகாது.
மங்கம்மா தற்போது என்னைக் கூட்டிக்கொண்டு சென்று கொண்டு இருக்கிறாள். எதிரில் வந்த அடுத்த வீட்டு ஆறுமுகம் மங்கம்மாவிடம் சொன்னபோது தான் தெரிந்தது. “மங்கம்மா இவளுக்குச் சந்தையில் ரூபாய் நாற்பதாயிரம் தருவார்கள். “
“ஆஹா – இப்படியொரு சதியா ?” என்று நினைக்கும்போது மங்கம்மா சொன்னதும் காதில் விழுந்தது.
“பசங்களுக்கு பள்ளிக்கூடத்தில் பீஸ் கட்ட வேண்டும். வேறு வழியில்லை அண்ணா .”
ஒரு நல்ல காரியத்திற்காக நான் கொண்டு செல்லப்படுகிறேன் என்பதில் எனக்கு மிகவும் பெருமையே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன