
“மாப் கிஜியே மேம்சாப் “என மான்சிங் மேரியிடம் கெஞ்ச, மேரியோ ” உன் பாச்சா என்னிடம் பலிக்காது” என்று சொல்ல அதை ஆமோதிப்பது போல் பக்கத்தில் நின்ற ஜானி வாலை ஆட்டியது. மான்சிங் சிறுவயதில் எடுபிடி வேலைக்காக மேரியிடம் சேர்ந்தான். படிப்பில்லாததால் அவனை வேலைக்குச் சேர்த்து விட்டு அவன் பெற்றார் ராஜஸ்தான் சென்றுவிட்டனர் .சிறு சிறு வேலை செய்து இன்று தொழில் அதிபர் ஆகிவிட்டான். மேரியின் கணவர் தவர, அவர் பிள்ளைகள் வெளிநாடு செல்ல, மேரி தனி ஆளாய் பாக்டரி நடத்தி வந்தார். கையில் காசு சேர்த்ததும், மான்சிங் நேரடியாக விலை பேசத் துணிந்தான். தினமும் மேரியை சந்தித்து பேரனம்பேச, மேரி தயங்க மான்சிங் மிரட்டத் தொடங்கினான். மேரிக்கு ஒரே துணை அவளது பிளாக் நாய் ஜானி தான்.எவரையும் அண்ட விடாது. அன்றும் மான்சிங் தகராறு செய்ய மேரி” மான்சிங் என்னிடம் வேலை பார்த்ததால் நான் வளர்த்த பையன் என்பதால், உன்னை உட்கார வைத்துப் பேசினேன். இனிமேல் மிரட்டினால் போலீஸை கூப்பிடுவேன் என்றாள். மான்சிங் பயந்தது போல் நடித்து மன்னிப்பு கேட்டான். அவன் நாடகம் தொடர்ந்தது. மேனியும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று உணர்ந்தாள்.
