மாலா மாதவன்/வீடற்றவளின் வீடு

அழுக்கின் மினுமினுப்பில் அவள் அழகியாகத் தெரிந்தாள். இப்பவோ அப்பவோ என அறுந்து போக நேரம் பார்த்திருந்த செருப்புக்களை இழுத்து இழுத்து நடந்து கொண்டிருந்தவள் முன்னே சென்று நின்றேன். உறுத்தாள்.
“உன் தலைல குருவி கொத்துது!” என்றேன்.
“ஆமா.. என் வீட்டுல அது கூடு கட்டுது.” என்றாள்.
“எது உன் வீடு?”
“இதான்!” அவளையே அவள் காண்பித்தாள்.
“வீட்டைச் சுமந்துட்டு திரியிறியா நீ?”
“நீயும் உன் வீட்டைச் சுமந்துட்டுத் தான் இருக்க.” என என் உடலைக் கைக்காட்டினாள்.
அவளைக் கூர்ந்தேன். அங்கங்கே வியாதியின் அடையாளங்கள்.
“கூட்டைக் கூடடைச்சுக் கொல்லாமல் கொன்றுபோட்டு கூட்டுக்குள்ள ஒடுங்கி நின்னு குருவி கொத்த இடம் கொடுத்து… அப்பத் தொலைச்ச வீட்டைத் தான் நான் தேடிப் போறேன். நீயும் வரியா?”
என்ற அவளின் கேள்விக்கு என்னில் விடையில்லை.
நான் என் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

3 Comments on “மாலா மாதவன்/வீடற்றவளின் வீடு”

Comments are closed.