
பூவாயி தரையில் ரோட்டில் குப்பை பொறுக்கி மூட்டையை தலையில் சுமந்து செல்ல மூட் டையின் மேல் சிட்டுக்குருவிகள் அமர்ந்து வர, இது தினசரி காட்சி. ஊரெல்லாம் குப்பைக் பொறுக்கி, அதை விற்று வரும் காசில், அவள் வண்டி ஓடும். அவளின் ஒரே பொழுதுபோக்கு, தான் சம்பாதித்த காசில் பறவைகளுக்குத் தீனி போடுவாள். தனக்கு வயிறு நிரம்பா விட்டாலும் சிட்டுக்குருவிகளை பட்டினி போடமாட்டாள். தினம் அவள் சிட்டுக்குருவிகளுக்கு உணவிட்டு பேசி மகிழ்வாள். குருவிகளும் அவளுடன் பதில் பேசும். இந்தக் காட்சியைக் காண அனைவருக்கும் வியப்பு. பூவாயி பிறவி ஊமை, செவிடு . தன் குறைபாராமல் ஆறறிவுடன் படைத்த இறைவனை திட்டாமல் ஐந்தறிவு ஜீவனுக்கு தினமும் உணவளித்து, பறவையோடு பறவையானாள்.
