ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.
கன்னட இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படுபவர்களில் ஒருவரான சிவராம காரந்த் கர்நாடகத்தில் எப்போதும் கொண்டாடப்படும் ஓர் எழுத்தாளர். அவரது நாவல்களான ”மண்ணும் மனிதரும்’. ’அழிந்த பிறகு’ சோமனதுடி’ முதலிய நாவல்கள் செவ்வியல் வகையைச் சார்ந்தவை.
அவரது மக்கள் உல்லாஸ் காரந்த், மாளவிகா, க்ஷாமா ஆகியோர் சேர்ந்து அவருடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கும் ஒரு நூல் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது. காரந்தரின் ஆளுமை கன்னட மொழி, இலக்கியம், பண்பாடு என்னும் தளங்களில் மூன்று பேரைப் பாதித்திருக்கிறது..
யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரீஷ் கார்நாடு, பி.வி. காரந்த் மூவரின் பங்களிப்பும் கர்நாடகம் தாண்டியது..
1922-ல் பூணூலை உதறியது போலவே காந்தீயத்தையும் உதறியதில் இவரை பெரியாரோடு ஒப்பிடுவார்கள். ஆனால் பெரியாரைப் போல இவர் யாரையும் நிந்தனை செய்ததில்லை. அது மட்டுமல்லாமல் காரந்தரின் கலையுணர்வு அவரை பெரியாரிடமிருந்து வேறுபடுத்துகிறது.
அதே சமயத்தில் தாகூர் அளவுக்கு அவரால் நிறுவனங்களை ஏற்படுத்த முடியவில்லை.
தங்களது தந்தை என்பதற்காக மக்கள் அவரை ஒரேயடியாகப் போற்றித்துதிக்கவில்லை.
அவரது பல எழுத்துக்கள் மிகச்சாதாரணமானவை என்று அவர் மகன் சொல்கிறார். பொதுநலன் தொடர்பான விஷயங்களில் அவரது நிலைப்பாடுகளில் ஸ்திரத்தன்மை இல்லை என்பதுவும் அவரது மக்கள் சொல்வது தான்…
மு.கருணாநிதி பற்றி ஸ்டாலினோ, மருத்துவர் ராமதாஸைப் பற்றி அன்புமணியோ இப்படி ஏதாவது சொல்லியிருக்கிறார்களா?
