
டெல்லியில் விமானத்தில் ஏறி உட்கார்ந்து பிறகு அந்த வீடு என் கண் முன்னே வந்து நின்றது. எத்தனை நினைவுகள்,… அந்த வீட்டில் காலடி வைத்து உள்ளே செல்ல போகிறோம் என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோஷம்! அம்மாவின் ஆசை நிறைவேற போகிறது. நான் சிறுவயதில் வளர்ந்த வீடு. அப்பாவின் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவுக்காக அந்த வீட்டு பத்திரத்தை வைத்து, அம்மா சேட்டிடம் கடன் வாங்கி இருந்தாள். வட்டி கட்ட முடியாததால் வட்டி ஏறிக்கொண்டே போனது. அம்மாவை ஏமாற்றி அந்த சேட்டு வீட்டை தானே வைத்துக் கொண்டான். அம்மாவையும் வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விட்டான். அம்மா சொந்த ஊருக்கு சென்று அங்கேயே தங்கி இருந்தாள். நானும் படிப்பை முடித்து டெல்லியில் வேலைக்கு வந்து விட்டேன் .நான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அந்த வீட்டை மீட்க கோர்ட்டில் கேஸ் போட்டேன். இதோ, இதோ என்று இழுத்துக் கொண்டே போனது .அம்மா தினமும் சாமியிடம் வேண்டிக் கொள்வாள் .நான் சாவதற்கு முன்னாடி ஒரு தடவையாவது அந்த வீட்டின் உள்ளே காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று. அவள் ஆசை நிறைவேற போகிறது. நேற்று கோர்ட்டில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது. நன்றி கடவுளே .இன்னும் சிறிது நேரத்தில் அந்த வீட்டின் முன்னால் நானும் என் அம்மாவும்….

சூப்பர், வாழ்த்துக்கள்