
அமலா ஒரு கைம்பெண். அவளுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை. கடந்த ஒரு வார காலமாக அவளுக்கு கடுமையான காய்ச்சல் .அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைபார்த்து விட்டாள். நோய் தீர்ந்தபாடில்லை. அவளுடைய ஒரே சொத்து இந்த ஆடு தான். அந்தஆடும் அவளுக்கு ஒரு குழந்தை போல் தான். இப்பொழுது அவள் தனியார் மருத்துவமனை ஒன்றில் தன்னுடைய மகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டாள். எப்படியும் ஒரு ஆயிரம் ரூபாயாவது மருத்துவச் சிகிச்சைக்கு ஆகும். யாரிடமும் கடன் வாங்கி பழக்கம் இல்லாத அவளுக்கு இந்த ஆட்டினை விற்று அதில் வரும் பணத்தை சிகிச்சைக்கு செலவழிக்க தீர்மானித்து விட்டாள். அருகில் இருக்கும் நகரத்தில் அன்று ஒரு வாரச் சந்தை. கடுமையான வெயில் காலையிலேயே. இருந்தாலும் தலையை தன்னுடைய புடவை தலைப்பால் மூடிக்கொண்டு கிளம்பிவிட்டாள். விரைவாக ஆட்டை விற்றுவிட்டு அந்த பணத்துடன் அவளுடைய அடுத்த பயணம் மருத்துவமனைக்குத் தான். என்ன செய்வது சில பேர் வாழ்க்கை அன்றாடம் இப்படித்தான் செல்கிறது .ஆண்டவன் மனது வைத்தால் அவளூடைய வாழ்க்கையில் வெளிச்சம் பிறக்கும். ஐயோ பாவம் ஆடு!
