சுமைதாங்கி/முனைவர் என் பத்ரி

கருப்பாயி மிகக் கடினமாக உழைப்பவள் .அன்று பக்கத்து ஊரில் உள்ள ஒரு நிலச்சுவந்தாரின் கழணியில் களை பறித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். வாங்கியிருந்த மளிகை சாமான்களை ஒரு மூட்டையாகச் கட்டித் தலையில் சுமந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு மஞ்சள் பை .அதில் எப்பொழுதும் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கும் .வேகமாக வெயிலில் நடந்து கொண்டிருந்த அவளுக்கு தண்ணீர் தாகம் அதிகமாக இருந்தது .தலைச் சுமையை எங்கேயாவது இறக்கி வைத்துவிட்டு மஞ்சள் பையில் இருக்கும் பாட்டில் தண்ணீரை குடிக்க அவளுக்கு ஆசை. அறுந்து போன செருப்பு அவளுடைய காலுக்கு வெப்பத்தை தருவதை தவிர்க்க உதவவில்லை.
ஒரு வழியாக அந்த கிராமத்து பஸ் நிறுத்தத்தை வந்து சேர்ந்தாள்.அங்கு ஒரு சுமைதாங்கி கண்ணில் பட்டது. சுமை தாங்கியின் மேல் தன்னுடைய தலைச்சுமையை இறக்கி வைத்தாள். தண்ணீரை குடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்த கருப்பாயி தன்னுடைய வீட்டிற்கு பயணத்தை தொடங்கினாள். இன்னும் சில நிமிடங்களில் வீட்டுக்குச் சென்று விடுவாள் என்று நான் நம்புகிறேன். ஒரு ஏழைத் தொழிலாளியின் அன்றாட வாழ்க்கை இப்படித்தானே?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன