சசிகலா விஸ்வநாதன்/குர்பானி


நஃபிஸா ஆட்டை ஓட்டிக்கொண்டு வந்தாள். நல்ல வளர்ந்த கொழுத்த ஆடு. குர்பானிக்கென்றே நேர்ந்து விட்டது போல் இருந்தது
அவனோட இள மஞ்சள் நிறம் மாலை வெயிலில் பொன் போன்று ஒளிர் விட்டது. நெற்றியில் கறுப்பு நிற திட்டில் நடுவில் வெள்ளை நிறத்தில் பொட்டு போல் ஒரு திட்டு
” நஃபீஸா அத்தை” என் குரல் கேட்க; கண நேரம் நிதானிக்க; கயிற்றுப் பிடியிலிருந்து ஆடு துள்ளி குதித்து பின்னால் ஓடி வந்துகொண்டிருந்த பேச்சியின் பக்கத்தில் போய் நின்றது. பேச்சி அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டு பெருத்த குரலில் அழ; ஆடு அவள் பின் பம்மியது. “நஃபீஸா அத்தை! வேண்டாம் அத்தை!” என்று விம்மினாள். பேச்சி ஆசையாய் வளர்க்கும் ஆடு எனப் புரிந்தது. நாளை குர்பானிக்கு வேறு ஆடு வாங்க இவளிடம் பணமில்லை; பேச்சி யின் அப்பாவால் பணம் திரும்ப முடியுமா; என்ற யோசனையில் இருக்க; பேச்சியின் தகப்பன் பின்னாடியே வந்து” தங்கச்சி! இந்தாம்மா! உன் பணம்! அது ஆசையாய் வளர்த்த குட்டி. என் தேவைக்கு அவள் அன்பாய் வளர்த்த ஆடு பலியாகக் கூடாது! தேவனுக்கே அது பொறுக்காது” என்றதும், நஃபிஸா வுக்கும் புரிந்தது; அது அல்லாவால் வரிக்கப்பட்ட ஆடு அல்ல; என்று.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன