கஸ்தூரி குருசாமி/ஐந்தறிவு உயிர்


கொத்தனாராக தினக்கூலிக்கு வேலை பார்த்து வந்த ரஹீம் கொரோனாவில் இறந்த பின்பு வாழ வழியின்றி ஒரு வீட்டில் சமையல் செய்து வந்தாள் கதீஜா. பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்.மதியம் மட்டும் அங்கு உணவு உண்பாள். அந்த வீட்டு எஜமானி அவளுடன் அன்பாகவே இருந்தாள்.அந்த வீட்டு காவல் காரனுக்கு அவள் மேல் ஒரு கண். வேலி இல்லா பயிர் தானே! பலமுறை அவளிடம் ரெட்டை அர்த்தத்தில் பேசுவான். அண்ணா என்னிடம் இது போல் பேசாதீர்கள் என்பாள் . ஆனால் அவன் தொடர்ந்து அவளுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். எஜமானியி டம் செல்லவும் பயம் பல வருடங்களாக அங்கு வேலைபார்க்கிறவன். என்ன செய்து என யோசித்து அவள் வளர்த்த ஆட்டையும் ஓட்டிக்கொண்டு பக்கத்து கிராமத்திற்கு சென்றாள்.
ஆட்டுப்பால் விற்று அதில் வரும் பணத்தில் வாழ்ந்தாலும், வாழ்க்கை நிம்மதியாக இருந்தது. தினம் ஒரு லிட்டர் பால் கறந்து 400 ரூபாய்க்கு விற்பாள்.அவள் கணவன் விட்டுச் சென்ற பொறுப்பை அந்த ஐந்தறிவு உயிர் காப்பாற்றியது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன