
மஞ்சு தன் காதலனை பார்க்க தோட்டத்திற்கு செல்கிறாள்,அவளோடு அவள் வளர்க்கும் மயிலும் உடன் சென்றது,மஞ்சையின் அழகுக்கு இணையாக ஒப்பனை செய்து காத்திருந்தாள். ஐந்து வயதிலிருந்து இந்த மயிலோடு lவிளையாடுகிறாள்.இன்று அவளை சந்திக்க வருவதாக காதலன் தகவல் கொடுத்தான். ஆயிரம் கனவுகளோடு காத்திருக்கும் அவள் அருகில் அவள் ஆசை மயிலும் நிற்கிறது. அதுவும் ஆணினம் தானே!மஞ்சுவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என அவள் காதலன் உழவன் போல் வேடமிட்டு வந்தான்.என் அன்பன் வரும் நேரம் இந்த உழவனுக்கு இங்கென்ன வேலை?என வெகுண்டா ள்.ஆனால் மயிலோ அவனை இனம் கண்டு கொண்டது.மயிலின் அகல் ஓசை கேட்டு அவன் சும்மா இரு என்றான்.வெகு அருகில் நிற்கும் அவன் முகம் பார்த்ததும் அவனை கண்டு நாணினாள்.மயில் தள்ளி நின்று தோழியின் உள்ளக் குறிப்பை கண்டு மகிழ்ந்தது
[22/07,
