ரேவதி பாலு/மாற்றங்கள் தந்த ஏற்றங்கள்

“அம்மா இன்னைக்கு நான் உன்னை ஒரு இடத்திற்கு அழைத்துக் கொண்டு போக போறேன் .அங்க போனதும் நீ ரொம்ப ஆச்சரியப்பட போறே!” என்றான் சுதாகர். “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே காரில் ஏறினாள் சாரதா. “என்னடா இந்த இடம் புரசைவாக்கம் மாதிரி இருக்கு?”

“அதே தாம்மா “

“.இந்த வீடு கூட நாம 50 வருஷத்துக்கு முன்னாடி குடித்தனம் இருந்தோமே அந்த வீடு மாதிரி இருக்கு ?”

“மாதிரி இல்லம்மா அதே வீடு நான்.”

” ஏண்டா வீட்ட இடிச்சு கட்ட போறேன் தானே நம்மள காலி பண்ண சொன்னாரு அந்த ஓனர்?”

” உண்மைதான் .ஆனால் ஏதோ வாரிசு பிரச்சனை சட்ட சிக்கல் எல்லாம் வந்து அந்த வீட்டை ஒண்ணும் பண்ண முடியாம அப்படியே விட்டுட்டாங்க.”
” அம்பது வருஷமா அப்படியே வா கிடக்கு?”
” ஆமாம்!”

அம்மா பரவசத்தோடு உள்ளே நுழைந்தாள்.
” அட இந்த தாழ்வாரத்தில் தாண்டா உங்களை எல்லாம் மடியில போட்டு குளிப்பாட்டுவேன். இந்தச் சின்ன சமையலறையில் தான் விறகடுப்பை வைத்து சமைத்துக் கொண்டிருப்பேன். பின்னாடி பவளமல்லி நந்தியாவட்டை செம்பருத்தி எல்லாம் பூத்துக் குலுங்குமே. மாடில சங்கீதம் கத்து கொடுப்பாங்களே அந்த அம்மா இருப்பாங்க.
நாள் முழுக்க சங்கீத மழை பொழியும். அதுக்கும் மேல ஹிந்தி பண்டிட்டு , அதான் யார பார்த்தாலும் கியா பாய் என்று கேட்பாரே சிரிச்ச முகமா அவர் இருப்பாரே?”

அம்மா ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தாள்.

‘கொல்ல பக்கத்துல தான் உங்க அப்பா ஈசி சேர் போட்டுண்டு உட்கார்ந்து நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருப்பார்” இப்போது இல்லாமல் போய்விட்ட அப்பாவையும் சேர்த்து நினைவு கூர்ந்தாள். “நம்மள மட்டும் காலி பண்ண சொல்லாம இருந்திருந்தா எவ்ளோ சந்தோஷமா இங்கேயே இருந்திருப்போம்” அம்மா பெருமூச்செறிந்தாள்.

அந்த வீட்டை விட்டு நகர்ந்ததால் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த மாற்றங்களும் ஏற்றங்களும் வந்தன. இப்பொழுது தன் குழந்தைகள் மூவரும் ஆளுக்கு ஒரு சொந்த வீடு கார் என்று வசதியாக இருக்கிறார்கள் என்பதெல்லாம் அம்மாவுக்கு அந்த நேரத்தில் கவனத்திற்கு வராமல் போனது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன