
அந்த ஏரியாவில் அவள் பிரபலமானவள். அவளைத் தேடி வராத வாடிக்கையாளரே இல்லை.
ஒவ்வொரு முறையும் அவள் வீட்டைத் தாண்டிப் போகும்போது அவள் வீட்டிற்குள் நுழைய வேண்டுமென்று நினைத்துக் கொள்வான்.
அவன் அவள் வீட்டைத் தாண்டிப் போகும்போது அந்தப் பெண் மேரி அவனைப் பார்த்துப் புன்னகை செய்வாள்.
அவனும் புன்னகை செய்வான்.
ஒருமுறையாவது அவளைப் பார்த்துப் பேச வேண்டுமென்று நினைப்பான்.
அவனுடைய கூச்சம் அவனை விரட்டிக் கொண்டே இருக்கும்.
25.07.2026
சனிக்கிழமை
காலை 10.29
