ஸ்ரீராம்/சிறகுகள்

கடைசித்தம்பி ரகு அந்தப் படத்தைக் கொண்டுவந்து ஹால் சுவரில் மாட்டினான்.

“இதைப் பார்த்து கூட அஞ்சு அண்ணனுக்கும் நிலைமை தெரிஞ்சு திருந்திடவா போறாங்க” என்று நினைத்துக் கொண்டான்.

அப்பா இறந்தபின் இவர்களை எடுத்து வளர்த்த அம்மாவும் மறைந்துவிட அக்காதான் எல்லோரையும் வளர்த்து ஆளாக்கினாள். அவள் ஒருத்தியின் சம்பாத்தியத்தில்தான் சாப்பாடு, வாடகை, படிப்பு எல்லாம். நலல்வேளை, அவள் அம்மா இருந்தபோதே நன்றாகக் படித்து நல்லதொரு வேலைக்கு வந்திருந்தாள்.

ஆறு சகோதரர்களில் ஐந்து பேர் சரியாக படிப்பு ஏறாததோடு குடி சூதாட்டம் என்று வீணாய்ப் போனார்கள். எவ்வளவு புத்தி சொல்லியும் ,மாறாவிட்டாலும் அவர்களையும் அக்காதான் பாதுகாத்தாள்.

அக்காவின் கஷ்டம் உணர்ந்து, சுமாராகப் படித்த கடைசித்தம்பி ஓரளவு நல்ல வருமானத்தில் ஒரு வேலைக்குச் சேர்ந்தான். அவன்தான் மற்றவர்களுக்கும் புரியட்டும் என்றும் அக்கா மேல் கொண்ட அன்பால் நெகிழ்ந்தும் இந்த ஓவியத்தைக் கொண்டு வந்து மாட்டியிருக்கிறான்.

வந்து பார்த்த அக்கா அவனை அருகே அழைத்து தலையைக் கோதி, நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன