
கவிதா ராமேஸ்வரத்தின் கடலோரப் பகுதியில் வசிக்கும் ஒரு சமூக சேவகி. அவள் ஒரு ஏழை .என்றாலும் மற்றவர் துயர் துடைக்கும் பணியில் சிறப்பான அக்கறை காட்டுபவர். அன்று காலை கட்டுமரத்திலிருந்து இலங்கையிலிருந்து ஆறு அகதிகள் ராமேஸ்வரத்தின் கடலோரத்தில் வந்து இறங்கினார்கள். ஒளி இழந்த முகமும், ஒட்டிய கண்களும், பசித்த வயிறும் அவளின் கண்களை கலங்க வைத்தன. ஏழ்மையில் இருந்தாலும், இதயத்தில் பெரிய அறைகள் அவளுக்கு இருந்தன .அவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் அவள். நாம் எல்லோரும் சேர்ந்து மீன்பிடிப்போம். கிடைக்கும் மீனை விற்போம் . அவற்றை விற்று வரும் பணத்தில் நம் வாழ்வைக் கடத்துவோம் .’ஆம்’ என்றபடி அவள் கொடுத்த உணவை உண்டு விட்டு எல்லோரும் அவளின் பின்னே கடலை நோக்கி பயணித்தார்கள் கடல் தரும் செல்வம் அவர்களை காப்பாற்றும் என்று நம்புவோமாக!
