சசிகலா விஸ்வநாதன்/நம் வாழ்க்கை நம்கையில்

அழகிய சிங்கரின் என்பா சரம்
( நம் வாழ்க்கை நம்கையில்- ஈற்றடி)
🌸
(1)
நாளைப் பொழுது என்றும் நமக்கென
நம்பி, தன் பாதை தானே
தெரிவு செய்து வாழக் கற்க;
நம் வாழ்க்கை நம் கையில்
🌸
(2)
நாளை என்ன நடக்கும் என்ற
ஊகத்தில், இன்றையப் பொழுதை கழிக்காமல்
இன்றையப் பொழுதை இனிதே வாழ
நம் வாழ்க்கை நம் கையில்
🌸
(3)
வாழவும் பொறுக்காது இந்த வையகம்
தாழவும் ஏற்காது இந்த வையம்
ஏற்றமும் இறக்கமும் இருப்பதே வாழ்வென்றெண்ணுக
நம் வாழ்க்கை நம்கையில்
🌸
(4)
தெளிந்த கேணி போல் மனதுடன்
அதில் மலர்ந்த தாமரை போல்
பட்டும் படாமல் வாழப் பழக
நம் வாழ்க்கை நம்கையில்
🌸
(5)
இப்படித்தான் ஒருத்தர் வாழ வேண்டும்;
அப்படி சட்டங்களை
விட்டு விட்டு
எளிதாகவும் இனிதாகவும் வாழ முயல்
நம் வாழ்க்கை நம்கையில்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன