
கணினி ஆசிரியை மாலினி 12-ஆம் வகுப்பு A-பிரிவுக்குள் நுழைய, மாணவர்கள் கோரஸாக ‘குட்மார்னிங் மிஸ்’ என்றனர்.
மாணவர்கள் குரலில் தொனித்த உற்சாகம் ஆற்றலாய் உருவெடுத்து தன்னுள் புகுந்தது போல் உணர்ந்த மாலினி..,
ஸ்டூடண்ட்ஸ்.. இன்னைக்கு AI தொழில்நுட்பம் பத்தி சொல்லப் போறேன்.
மடைதிறந்த வெள்ளமாய் தான் சேகரித்து வைத்திருந்த தரவுகளை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் விளக்கினாள்.
நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நல்லாப் புரிஞ்சுக்கணும். இன்னைக்கு AI யோட ஆதிக்கம்.. நாளைக்குப் புதுசா ஒண்ணு வந்தா இது காலாவதியாயிடும்.
அதுதான் நிதர்சனம்.கயிறு மேல் நடக்குற பொம்மலாட்ட வித்தை மாதிரிதான் உங்க நிலைமை.
எப்பவும் கவனமா மட்டுமில்லாமல் மாற்றங்களுக்கு ஏற்ப அப்டேட்டடா இருந்தாதான் பிழைக்க முடியும்.
கண்டிப்பா மிஸ்… எங்களோட பகுத்தறியற திறனை வளர்த்து அசுரத்தனமா வளர்ந்துக்கிட்டிருக்கிற டெக்னாலஜிக்குத் தகுந்த மாதிரி எங்க அறிவைப் பெருக்கிப்போம்.
வகுப்பு முடிந்து மனநிறைவுடன் வெளியேறினாள் மாலினி.
