ரோஸ் குக் கவிதை

தன் வாழ்க்கையில்
பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் கையாள்பவளுக்கான ஒரு கவிதை


தமிழில் : க.மோகனரங்கன்

தன் வாழ்க்கையில்
பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் கையாள்பவள் ஒருத்திக்கு இக்கவிதை சமர்ப்பணம்.
அவ்வப்போது அமைதியாக இரு. அவ்வப்போது அலட்டிக்கொள்ளாமல் இரு.
இதை மீண்டும் மீண்டும்
சொல்ல வேண்டும்;
அவள் கவனத்தை ஈர்ப்பதற்காக
மறுபடியும் மறுபடியும் சொல்ல வேண்டும்;
ஏனெனில், வாழ்க்கையின்
பல பொறுப்புகளைச் சுமப்பவளுக்கு இதைச் செவிமடுப்பது
கடினமாக இருக்கலாம்.
அவ்வப்போது அமைதியாக இரு. அவ்வப்போது அலட்டிக்கொள்ளாமல் இரு.
அவ்வப்போது எல்லாவற்றையும்
கீழே விழுவதற்கு விட்டுவிடு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன