
அலமேலு வசித்து வந்தது ஒரு சிறிய கிராமத்தில். அங்கு கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த தண்ணீர் பஞ்சம். விவசாயமும் இல்லை. விளைச்சலும் இல்லை. மக்கள் பட்டினியின் எல்லைக்கே சென்று விட்டார்கள் .அந்த நிலையில் ஒருநாள் காலை யாரோ கொண்டு போன வாழைப் பழத்திலிருந்து சில பழங்கள் கொத்தாக அவளுடைய வீட்டின் முன்னால் விழுந்து கிடந்தன. யார் பசியையோ தீர்க்க வேண்டிய இந்த பழங்கள் இவள் வீட்டு வாசலில். இதுதான் இறைவனின் திருவிளையாடல் என்பதோ? குழந்தைகள் சாப்பிட்டு பசியாறட்டும் என்று அம்மா காத்திருக்கிறாள். அம்மா சாப்பிடட்டும் என்று குழந்தைகள் அது தொடாமல் இருக்கிறார்கள் .என்ன ஆகும்? இதையும் இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும். யாருக்கு பசி அதிகமோ அவர்கள் முதலில் அதை உண்ணுவது நிச்சயம்.
