
முதுபெரும் கர்னாடக இசைப் பாடகர் அபராஜிதன், உதவியாளர் சொல்லி, வெளியே வந்து பார்த்தபோது அந்த மூவரும் ஹாலில் சோபாவைப் புறக்கணித்து தரையில் உட்கார்ந்து இருந்தார்கள். யார் என்று ஒரு நிமிடம் நெற்றியை சுருக்கிய அவருக்கு, சட்டென இசையமைப்பாளர் விஸ்வம்குமார் அனுப்பிய ஆட்கள் என்பது நினைவுக்கு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு விஸ்வம்குமார் ஒரு படத்தின் பாடல்களை எழுத ஒரு காட்டுக்குள் அமர்ந்து யோசித்து பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தபோது, இனிமையான குரலில் சில பாடல்கள் புரியாத மொழியில் கேட்டிருக்கிறார்.
சென்று பார்த்தால் ஆதிவாசி பெண் ஒருத்தி தன் மகள்களுடன் பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். அப்போதே அந்தப் பெண்ணை தன்னுடைய இசையில் பாட வைக்க முடிவு செய்தவர், இன்னும் சில குரல் பயிற்சிகளுக்காக அபராஜதனிடம் அவரை அனுப்புவதாக ஃபோன் செய்து சொல்லி இருந்தார்.
அவர்கள்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்கள் காணிக்கையாக கொண்டு வந்திருக்கும் மலைப்பழத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டார். அவர்கள்தான். இதோ அவரால் அவர்கள் பட்டை தீட்டப்பட்டு திரை வானில் ஜொலிக்கப் போகிறார்கள்.
விரைவில் எதிர்பாருங்கள்.

படத்திற்கு வித்யாசமான சிந்தனையில் உதித்த உதயகீதங்கள் என்று சொல்லலாமோ!!! அருமை, ஶ்ரீராம்.
கீதா
படத்திற்கு, வித்யாசமான சிந்தனையில் கோணத்தில் உதித்த உதயகீதங்கள்!!! அருமை, ஶ்ரீராம்
கீதா
நன்றி கீதா.