அழகியசிங்கர்/தீர்வு

சத்குருவைப் பார்க்க அவள் தன் பிள்ளைகளையும் அழைத்து வந்தாள். தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் ஓடிப் போய்விட்டான் அவள் கணவன் என்று கலக்கத்துடன் சத்குருவிடம் பவ்யமாக சொன்னாள் அவள்.

சத்குரு தன்னுடைய கருணைப்பார்வையைச் செலுத்தினார்.
“கவலைப் படாதே. நீ ஆசிரமத்திலேயே தங்கிவிடு. உன் பிள்ளைகளின் படிப்புச் செலவை ஆசிரமம் ஏற்றுக் கொள்ளும். தானாகவே உன்னை நாடி அவன் வருவான்,” என்றார் சத்குரு.
தன் இரண்டு பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு சத்குருவைப் பார்த்து கண்ணீர் உகுத்தாள் அவள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன