விஜயலக்ஷ்மி கண்ணன்/தேவர் அருள்வார் தினம்

1.

நல்லதை நினைத்து நல்லதை செய்தாலும்

இறை அடியார்கள் தொண்டு செய்தாலும்

மக்கள் சேவையில் மகேசனைக்
கண்டாலும்

தேவர் அருள்வார் தினம்

2.

மழைப் பொய்த்தாலும்
பிழைகள் பெருகினாலும்,

பஞ்சமும் பட்டினியும்
தலைவிரித்து ஆடினாலும்,

நெஞ்சில் ஈரமும்
வஞ்சமில்லா சொல்லுமிருந்தால்,

தேவர் அருள்வார் தினம்.