
1.
வானம் பொய்த்து நிலம் தரிசானாலும்
ஆளும் தலைவர் அநீதி இழைப்பினும்
அங்கங்கே வன்முறை தலை விரித்தாலும்
நல்லவர்கள் செய்யும் தர்ம சேவையால்
தேவர் அருள்வார் தினம் !
2.
வலிய உதவிக்கரம் நீட்டும் மனமிருந்தால்
பிற உயிர்களை நேசிக்கும் பண்பிருந்தால்
சினத்தைத் தவிர்த்து
அன்பை விதைத்தால்
தேவர் அருள்வார் தினம் !
3.
இயற்கையைப் பேணி இசைந்து
வாழ்ந்திடின்
போர் நிறுத்தி அமைதி காத்திடின்
தன்னலம் தவிர்த்து பொதுநலம்
விழைந்திடின்
தேவர் அருள்வார் தினம் !
