
(1)
நல்ல ஒரு நாள் நன்மையாக
நாளும் விளைந்திட ;உள்ளமதில் கள்ளமின்றி
எள்ளி நகைப்போர் முன்னிடறாமல் இருக்க;
தேவர் அருள்வார் தினம்
💥
(2)
வேல் கொண்டு வினை தீர்க்கும்
வேலவன் அவன், சேவடி தொழ
மேலானது எல்லாம் கை அகப்படும்
தேவர் அருள்வார் தினம்
💥
(3)
ஐயன் அளந்தது இரு நாழியே
அது கொண்டு அண்டமெல்லாம் உயிர்
ஓம்பி நிற்கும்; நம்பும் இதை
தேவர் அருள்வார் தினம்
💥
(4)
காலையில் கதிரவன் தினம் எழுவான்
மாலையில் குமுதம் தினம் தோன்றுவான்
மாறாது தினம் இருக்கும் நியதியன்ன
தேவர் அருள்வார் தினம்
💥
(5)
தீதும் நன்றும் பிறர் தருவதும்
வறுமையும் செல்வமும் நாம் படைப்பதும்
ஏற்றமும் இறக்கமும் இன்பமும் துன்பமும்
தேவர் அருள்வார் தினம்
