ஹரணி/தேவர் அருள்வார் தினம்

1.

நல்லது செய்து அல்லது அகற்றி
இல்லம் இன்புற அன்பு காட்டி
உற்ற துயருக்கு உடனே உதவிட
தேவர் அருள்வார் தினம்.

०००

2.
எதையும் தெரிந்து செய்க தெளிந்து
மனத்தில் சிந்தை சிறக்கச் செய்க
அஞ்சுவன எண்ணி அஞ்சிட வாழ்ந்தால்
தேவர் அருள்வார் தினம்.