
உண்மை என்ற ஒன்று இருக்கிறதே அது பல முகங்களை உடையது.அவர் பல முக
ங்களைக் காட்டும் ஒரேமனிதராக இருக்கிறார்.இது உண்மை என்ற தத்துவத்தின்
குறைபாடேதவிர நபர்களின்குறையன்று.ஒதுங்கி நின்றும் ஒட்டிநின்றும் ஒரு ஜீவி
ய சரிதம் எழுதுவது அல்லது பேசுவது என்பது தமிழர்களுக்குக் கைவராதகலை
தான் என்பார் க.நா.சு.பகிரங்கமாக எழுதுவது சில அசௌர்யங்களை எற்படுத்தி
விடும்.குற்ற உணர்வுகூட வரலாம்.
பெண் என்றும் இந்திய மரபில் அடிமைதான்.சுயசரிதை இல்லை.பெண்களின்
சுயசரிதை என்பது ஆண்களின் கீர்த்தியையே பேசும்.அது ஆண்களுக்கான
முகத்தையே தருகிறது. “எனக்குச் சுயசரிதை இல்லை .அதை எழுத ஆரம்பித்த
போது நான் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதாகவே இருக்கிறது”
ஆர்.சூடாமணியின் குரல் சன்னமானது. ஆனால் அழுத்தமானது.சூடாமணியின்
கதைகள் எல்லாமே அவருடைய சுய சரிதைதாம்.தன் ஆத்மா புற உலகிலிரு
ந்து கிரகிக்கிற விஷயங்களின் விளைவுகள்.அனுபவங்களின் விரிவுகள்.ஒரு
கழைக்கூத்தாடியின் லாவகமான மனோவியல் சாகசங்களே.
கலையின் பணி உலகை விமரிசிப்பது மட்டுமல்ல.உலகை விவரிப்பது.கேள்விக்
குள்ளாக்குவது. சூடாமணியின் கதைகள் விவரிப்புகள் அடங்கியவை.அவருக்கு
மாயக்கண் இருந்தது.சூடாமணியை அறிந்துகொள்ளத் தனிமனசு வேண்டும்.
அப்போது பெண் எழுத்தாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாசிக்கத் தோதான அம்மா
மிக் கதைகளையே எழுதிக் கொண்டிருந்தனர்.இவையே கதை இலக்கியங்களாகத்
தூக்கி நிறுத்தப்பட்டபோது ஆர்.சூடாமணியின் எழுத்து மெல்லிய தணலாக
இருந்தது.
திருமணம் என்பதே இல்லாமல் போகும் நாளில்தான் ஆண்பெண் இருவரின்
வாழ்க்கையும் தூய்மையாக மாறும். திருமணம் என்பதே மாறிவரும் வாழ்க்
கைக்கு ஒருவிதத்தில் எதிரானதுதான் ஆர்.சூடாமணியின் செய்தி திடுக்கிட
வைத்தது.ஓர் இந்திய சமூகத்தில் பெண்ணால் திடீரென உரத்த குரல் எழுப்ப
முடியாது.இங்கே மரபு கெட்டித்தன்மையுடையது.திருதராஷ்ட்ரனால் பார்க்க
முடியாது என்பதற்காக அவனது மனைவி காந்தாரி கண்களைக் கட்டிக் கொண்டு
இருட்டில் ஜீவிக்கிறாள்.சீதை எந்தக் கேள்வியும் கேட்காமல் நெருப்பில் பிர
வேசிக்கிறாள்.பெண்களை முப்பதுவயதிலேயே முதுமையடையும் மனோபாவத்
திற்குக் கொண்டுவரும் தந்திரம் வெற்றிகரமாகவே நடக்கிறது.தன் கதைகள் வழி
சூடாமணி கேள்விகளை எழுப்புகிறார். இன்றுகூட எழுதத் தயங்கும் கதைகள்
தாம்.
குறிப்பாக “நான்காம் ஆசிரமம்”கனவுகள் உடலின் புதிர்கள்,அறிவுத்தேடலை முன்
நிறுத்தும் மூன்றாம்பருவம்இப்படித்தான். மூன்றாம் பருவத்தில் சிக்கிக் கொள்ளா
மல் தன்னை உணரத் தனிமைதேடிப் புறப்படுவதாகவே இருந்தது.கதை நேர்த்தி
அபாரமானது.ஒரு பெண்பாத்திரம் இப்படிப் படைக்கப்பட வேண்டும் என்ற
மரபை உடைக்கிறார்.இவர்காட்டும் பாத்திரங்களின் விடுதலை என்பது துறவை
நோக்கி ஓடுவதன்று.வாழ்க்கையைக் கொண்டாடுவது.வெளியே செல்ல விரும்பும்
பெண்மனம்.வாழ்வைக் கொண்டாடும் பெண்மனம்.இரு நிலைகளில் நான்காம்
ஆசிரமம் கதையின் நாயகி வடிவம் கொள்கிறாள்.உணர்வு நிறைவு,உடல்
நிறைவு, சிந்தனை நிறைவு இவற்றோடு பெண்ணிற்குச் சுதந்திரம் அடிப்படைத்
தேவைதான்.ஆர்.சூடாமணியின் இயல் பான சொற்களே வீரியம் கொள்ளவும்
வசீகரமாக இருப்பதற்கும் மெல்லிய இறகுபோல் அசைந்தாடுவதற்குமான
தகுதியைப் பெறுகின்றன.’அவள்வீடு’கதையில் சூடாமணியின் கலகக்குரல்
கேட்கிறது.தனது இளவயது கொழுந்தனோடு வாழ முடிவெடுப்பது ஐம்பதுகளில்
பெரிய பாய்ச்சல்தான்.செத்தவனோடு பந்தம் போகலேன்னு ஆயுசுக்கும் அலங்
கோலமாக ஒதுக்குகிறது வன்முறைதான் என்கிறாள்
வீடுகளுக்குள்ளும் தெருக்களுக்குள்ளும் நடந்த ஆத்மார்த்தமான உரையாடலே
சூடாமணியின் கதைகள். ‘ ஆண்கள் இறுதித் தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக
இருக்கிறார்கள் ‘ என்பார் சூடாமணி. வாழ்வின் பிரதான கேள்விகளையும்
மர்மங்களையும் சிக்கல்களையும் “லூயி போர்ஹே” ஒருகுண்டூசி முனையில் வைக்க
முடியும் என்பார்.சூடாமணியோ வாழ்க்கையில் எல்லாவற்றையும்விட
பெரிய நல்லது மனுஷியாக ஒருத்தர் கிட்ட காட்டக்கூடிய அன்பும் பாசமும்
தான் என்று உறுதிசெய்து ஊசிமுனையிலேயே உட்கார்த்தி வைத்துவிடுகிறார்.
தனக்கு எதுவுமே கிட்டாவிட்டாலும் வாழ்வை நேசித்தார்.தனக்கிருந்த சொத்துக்கள்
இருபத்திஏழுகோடிகளை பல்வேறு சமூக நிறுவனங்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டார். அன்பு என்பது எல்லா இடங்களுக்கும் பரவமுடியாது.அது சிறுபொருள்.நியாயம் என்பது உலகம் முழு வதற்கும் ஒரே நெறியாய் விஸ்வரூபம் எடுத்து வியாபிக்க முடியும்.இது மானிடத்தின் பாற்கடலிலிருந்து வரும் அமுதம்.

சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள்.