
வேலு தாத்தாவைத் தேடிக் கொண்டே வந்த சீனு,
‘இந்தத் தாத்தா எங்க போனாரு? ஒவ்வொரு வீடா தினமும் போயி பழைய புத்தகம் இருக்குதான்னு கேட்பாரு. இல்லைன்னா குப்பைத் தொட்டியைக் கிளறி அங்க ஒருவேளை புத்தகம் இருந்தா
அதைத் தூசி தட்டி வீட்டுக்கு எடுத்துட்டு வருவாரு.’
அங்கிருந்த ஒரு பெண் சிரித்தபடி,
“பார்ரா. இந்தத் தாத்தா தெனமும் வந்து என்னமோ தேடுது “
“என் தாத்தாக்கு புத்தகம்னா உசிரு.அதான் புத்தகத்தை எங்க பார்த்தாலும் எடுத்துகினு வந்துடும்”
“சீனு..உன்னோட பாட்டி ஒரு புத்தகப் புழு. ஓய்வு நேரத்துல வயசானவங்க, குழந்தைகளுக்குக் கதையா சொல்வா. அவங்களோட நினைவா ஒரு நூலகம் ஆரம்பிக்கணும்னு ஒரு கனவு. என்றார் தாத்தா.
சீனு மேற்படிப்பிற்காக வெளி நாடு சென்று விட்டுத் தாத்தாவின் கிராமத்துக்கு வந்து தாத்தாவின் வீட்டைப் பார்த்து விக்கித்துப் போனான். வீட்டினுள் தாத்தா சேமித்து வைத்த புத்தகங்கள் வாயிலாக மாறி இருந்தது. எங்கும் புத்தகங்கள். அங்கிருந்த வாசகங்கள் சீனுவின் மனதைக் கவர்ந்தது.
“இங்கு வாயிலாகக் காக்கும் காகிதமான புத்தகங்களைக் குப்பை என்று நினைக்கலாம். ஆனால் அதில் உள்ள அறிவு குப்பையல்ல.” சீனு கண்களில் நீர் வழியப் புத்தகங்களைத் தடவிக் கொடுத்தான்.
125
