அர்ஜுனன்/கரை கடந்த காதல்

ஃபிரான்ஸ் தேசத்திற்கு ராம் சுற்றுலா சென்றபோது, அந்த நூலகத்தில் தற்செயலாக அந்தப் புத்தகத்தைப் பார்த்தான்.

“கண்ணீர் பூக்கள்” கவிதை தொகுதி.

அட்டைப் பக்கத்தைப் புரட்டியவுடன் வந்த முதல் பக்கத்தில்.

‘கரை கடந்த காதல்’ என்ற குறிப்புடன் இரண்டு கையெழுத்துக்கள்.

முதலாவது அவனது தந்தையின் கையெழுத்து!

இரண்டாவது கையெழுத்து பிரெஞ்ச் மொழியில்!

நூலகரிடம் அதுகுறித்து கேட்டபோது,

இரண்டாவது கையெழுத்து “ஷோபி” என்று ஃபிரெஞ்சில் போடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

அந்தப் புத்தகத்தை அவரிடம் கேட்டு வாங்கி ஊருக்கு வந்தவன், தந்தையிடம்.

“யாருப்பா அந்த ஷோபி?” என்றான்.

அந்தப் பெயரைக் கேட்டதும், ஒரு நிமிடம் அவரது முகம் பரவசமானது. ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

புத்தகத்தை அவரிடம் காண்பித்தபோது, ஆசையாக அதை வாங்கிக்கொண்டு, அந்தப் பக்கத்தைத் தன் கைகளால் தடவினார்.

“நான் அங்கே படிச்சப்போ ஷோபியை காதலிச்சேன். இது அவளுக்கு நான் குடுத்த நினைவுப் பரிசு. பிறகு பெற்றோர் வற்புறத்தலால அவளைக் கைவிட்டு, இங்கே வந்து உங்கம்மாவை கல்யாணம் பண்ணினேன். நான் வந்தப்புறம் இந்தப் புத்தகத்தை அந்த நூலகத்தில அவ குடுத்திருப்பா.”  என்று கண்கள் பணிக்கச் சொன்னபோது, அவரது மனம் கடல் கடந்து சென்றது.

124 வார்த்தைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன