அ. கௌரி சங்கர்/ஏணிப்படிகள்

நூலகத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன பேரன் கணேஷை கூட்டிக்கொண்டு வந்தார் தாத்தா ஷண்முகம்.

“என்ன தாத்தா – குப்பை மாதிரி அடுக்கி வைச்சிருக்காங்களே ?”

“அதற்கும் காரணம் இருக்கிறது. வாசலில் இங்கும் அங்கும் சொருகி வைத்திருக்கிறார்களே அவை அனைத்தும் சில வருடங்களுக்கு முன்பு தயாரானவை. புதிய புத்தகங்கள் உள்ளே இருக்கின்றன.“

” எதற்காக ?”

“இன்றைய வாசிப்பாளர்கள் விருப்பத்துக்கு உதவும் புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. மற்றவை இப்படி வைத்திருக்கிறார்கள். “

“அப்படியானால் அவற்றை அழித்து விடலாமே ?”

” நீ தவறாக முடிவு செய்கிறாய் ? புத்தகங்கள் கிடைப்பதற்கரிய சொத்துக்கள். கண் முன்பாகத் தெரியும் பழைய புத்தகங்கள் ஒரு காலத்தில் பொக்கிஷங்களாக இருந்தவை. அவற்றைத் தேடித் தேடி பெருநகரங்களுக்கு சென்று வந்தவர்கள் பலர். பல தகவல்களைச் சேகரித்து ஒருமித்த சிந்தனையால் அவற்றைக் கோர்த்து வாசிப்பவர்களுக்குப் புத்தகங்களாகக் கொடுப்பவர்கள் ஒரு சிலரே. புத்தகங்கள் எழுதியவர்களின் சிந்தனைகள், கற்பனைகள், இலட்சியங்கள் என்று அனைத்தும் அடங்கியவை. புத்தகங்கள் அடுத்து வரும் தலைமுறையினர் படித்து உயர்வதற்கு உதவும் ஏணிப்படிகள். “

“அப்படியானால் நானும் எழுதலாமா ?”

” எழுது.”

நெஞ்சுக்குள் எழுதினான் கணேஷ் –  “நானும் புத்தகங்கள் எழுதுவேன்.”

 (125 words)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன