
“காளி” பஸ்ஸில் தனக்கு முன்னால் நின்ற வாலிபனி டத்தில் பிக் பாக்கெட் அடித்துப் பர்சை கையில் வைத்திருந்தான். மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கினான்.நிம்மதி பெருமூச்சுவிட்டு திரும்பியபோது அங்கே ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டு போனில் பேசிக்கொண்டிருந்தார். மீண்டும் மனசு திக்.. திக் என்று அடிக்க ஆரம்பித்தது. சற்றென்று பக்கத்தில் உள்ள பழைய நூலகத்தில் புகுந்தான். நூலகம் முழுவதும் மிகவும் பழைய புத்தகங்கலால் நிரம்பி வழிந்தது. அதிலிருந்து சற்று தடிமனான ஒரு புத்தகத்தை எடுத்து அதன் உள்ளே தான் பிக்பாக்கெட் அடித்த பர்சை வைத்தான். அங்கேயே உட்கார்ந்து அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான். புத்தகம் விறுவிறுப்பாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. நூலகர் வந்து முதுகில் தட்டி நேரமாயிடுச்சு நூலகத்தை மூடப் போகிறேன், நாளைக்கு வந்து படியுங்கள் என்று புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்தார். காளியும் கிளம்பி வீட்டுக்குப் போனான். இரவு தூக்கமே வரவில்லை. காலை 10 மணிக்கு நூலகம் திறந்தவுடன் ஓடிப்போய்ப் பார்த்தான்.அவனுக்குப் பெரிய அதிர்ச்சி! அவன் யாரிடத்தில் திருடினானோ அந்த வாலிபன் அந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான்.
122
