பத்மா ராகவன்/தினப்பலன்

“இன்று உன்னால் யாரோ ஒருவர் மகிழ்சியடைவார்” காலைப் பேப்பரில் தினப்பலனைப் படித்துச் சிரித்துக் கொண்டார், அரசு நடத்தும் நூலகத்தில் அந்த ஏரியா ப்ரான்ஞ்ச் பொறுப்பாளரான  சபேசன். ஆனால் நாள்பூரா ஏதும் நடக்கலை.

மாலை நாலு முதல் ஏழுவரை திறக்கப்படும் லைப்ரரிக்கு வந்தவர், ஒரு முறை வழக்கம்போல் நூலகத்தை வலம் வந்தார்…

தமிழ் மர்மக் கதைகள் இருக்கும் அலமாரியின் பக்கம் வந்தவர், அடுக்கி வைத்திருந்த பூலோகி எழுதிய மர்ம நாவல்களிலிருந்து இரண்டை எடுத்துவந்து தான் படிக்கலாம்னு டிராயரில் வைத்தார்.

நாள் தவறாமல் வழக்கமாக ஐந்து மணிக்கு வரும் ஒரு இளம்பெண்,  நேராக அந்தப்பக்கம் போனாள். அங்கே வரிசையில்  பூலோகியின் இருபுத்தகங்கள் குறைந்திருப்பதைப் பார்த்து இவரிடம் ஓடிவந்து, “அந்தப்புத்தகங்களை யாரானும் படிக்க எடுத்தாங்களா சார்” என வினவினாள். அவர் ஆம் என்றதும் “ஆகா. இனி என் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடையும்.நன்றிசார்”. என மகிழ்ந்தாள்.

விஷயம் இதுதான். பூலோகி இறக்குமுன் தான் எழுதிய நாவல்களை லைப்ரரியில் கொடுக்கச்சொல்லி,  “யாராவது இவற்றைப் படித்தால் அப்போ என் ஆத்மா சாந்தியடையும்” என்றார்களாம். இப்போ சபேசன்,  தான் படிக்கணும்னு   எடுத்து வைத்து, அவரறியாமல் உதவியிருக்கிறார். தினப்பலன் பலித்தது.

122 வார்த்தைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன