தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/ப்ளெஸி

“எல்லா பசங்களும் ப்ளெஸி பின்னாடி அலையுறோம்; அவ என்னான்னா புத்தகம் பின்னாடி அலையுறா. எந்நேரமும் லைப்ரேரிதான். ஞாயிற்றுக்கிழமை கூட அரசாங்க லைப்ரேரிக்கு ஓடிடுறா. நாலஞ்சு பேரு கல்யாண ப்ரொபஸல் வரை போயிட்டாங்க. ஒரே கண்டிஷன். வீடு ஃபுல்லா புத்தகமாயிருக்கணும்மா. சரியான புத்தகப் புழு.” நண்பர்கள் செல்வன், ரவி, சங்கர், சூசை நாலு பேரும் விரும்புகிற ப்ளெஸி பற்றிய உரையாடல் இது.

” டேய் சூசை எப்படியிருக்கே?  பாத்து நாலு வருஷமாசாசு. ப்ளெஸி ப்ளெஸின்னு பின்னாடி அலைஞ்சியே; என்னாச்சு?” எனச் செல்வன் கேட்கச் சூசை அழத் தொடங்கினான். கைக்குட்டையால் மூக்கைத் துடைத்தான். பக்கத்தில் நின்ற ரவியும் சங்கரும் செல்வனை, மனைவிமார்கள் காய்கறி வாங்கி வந்த கணவனை முறைப்பது போல முறைத்தனர்.

” பாண்டிச்சேரிக்கு மாற்றலாயி போனேன்டா. அவ அந்தக் கால ஃப்ரெஞ்ச் வீட்டை வாடகைக்கு எடுத்து எல்லா ரூமுலயும் புக்கா அடுக்கிட்டாடா.  குடித்தனமே பணாலாயிடுத்து. ஏன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினோம்னு மனசு  தூங்கவிடாமல் கேக்குது. பேசாம என்னியக் காதலிச்ச  சுசியையே கல்யாணம் பண்ணியிருக்கலாமோன்னு தோணுது. சூசை சுசி பெயராவது பொருந்தி வந்திருக்கும்.” மீண்டும் கைக்குட்டையைப் பேண்டிலிருந்து எடுத்தான். ஓட்டம் எடுத்தனர் செல்வனும் ரவியும் சங்கரும்.

(126 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன