
அறிவோடு கிளத்தல்
நல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல் கொல்வழியிற்
சென்று குறுகுவதேன் புல்லறிவே
விளக்கம்: சிறுமையுள்ள அறிவே!நீ நல்ல அறவழியில் சென்று புகழ் பெற்ற நல்வினைக் கணக்கை எழுதாமல் ஆருயிர்களை கொன்று மறவழியால் இகழைத் தேடுவது ஏன்?
கைவிளக்கு கொண்டு கடலில்வீழ் வார்போல்
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே
விளக்கம்: சிறிய அறிவுடைய மனிதா! கையிலே விளக்கைப் பிடித்துச் சென்றும் கடலிருப்பது தெரியாமல் அதிலே விழுந்து விடுவாரைப் போல உண்மையான கடவுளொளியாம் விளக்கு உயிரிலே இருக்கும் நிலையில், அதை பயன்படுத்தாமல், தீய நெறியில் சென்று வீழ்த்தழிவது எதற்காக? ஐயோ!

எனது பதிவுகள் விருட்சம் நாளிதழில் பதிவிடுதல் மட்டற்ற மகிழ்ச்சி. ஐயா அழகியசிங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்